கோவையில் மருத்துவ முகாம்: அனுமதி மறுப்பு துரோகம் – வானதி சீனிவாசன் பேட்டி !

X
கோவை செட்டிவீதியில் நடைபெற்ற நலம் மருத்துவ முகாமில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை இருவாரம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெறுகிறது என்றார். மாநகராட்சி அனுமதி மறுப்பதால் தனியார் மண்டபங்களில் முகாம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தொகுதி எம்எல்ஏக்கள் செய்யும் மக்கள் நல பணிகளை தடுக்குவது மக்களுக்கு துரோகம் எனவும் குற்றம்சாட்டினார். கோவையில் குடிநீர் பற்றாக்குறைக்கு சிறுவாணி அணை நீரைப் பயன்படுத்த அரசு முயற்சி செய்யவில்லை என்றும், திமுகவுக்கு எதிராக உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே NDA-வின் நோக்கம் என்றும் கூறினார். நடிகர் விஜய் பிரச்சினைகளை முழுமையாக அறிந்து தான் பேச வேண்டும் எனவும், அண்ணாமலைக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன ஆனால் உடல்நிலை காரணமாக அவர் பங்கேற்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார். தேர்தலில் பணம் கொடுப்பதும் பெறுவதும் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது, இதை நிறுத்த இரண்டு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையமே வாக்காளர் பட்டியல் குறைகளை ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story

