பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் குருதிக்கொடை முகாம் !
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதனை கோவை திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார். பெரியார் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் குருதிக்கொடை வழங்கினர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சாதி வேறுபாடுகளை ஒழிக்கும் நோக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக கழகத்தினர் தெரிவித்தனர்.
Next Story



