கோவை பேரூரில் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் !

X
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் அருகே நொய்யல் ஆற்றுப் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே வந்த பக்தர்கள் அரிசி, பருப்பு, எள் சாதம் உள்ளிட்ட படையல்களை வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். புதிதாக கட்டப்பட்ட தர்ப்பண மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து வழிபாடு செய்தனர். தர்ப்பணத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் கோவில் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story

