கோவை: மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதைத்து தீர்ப்பு !

கோவை: மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதைத்து தீர்ப்பு !
X
கணவனை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால், மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
வேலைக்கு செல்ல வற்புறுத்திய மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி ராமநாதனுக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளது. தெலுங்குபாளையம் பிரியாநகர் சேர்ந்த ராமநாதன் (கூலித்தொழிலாளி), வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி அனுராதாவுடன் தகராறு ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே அனுராதாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்துத் தண்டனை வழங்கினார்.
Next Story