தக்கலை :  பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு

தக்கலை :  பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு
X
2 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜான் (50)என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதியில் செல்லும்போது, அங்கு நின்று கொண்டிருந்த சாரோன் பிரபு,  ஆல்பர்ட்,  ஆண்டோ பிரபு மற்றும் சுனில் ஆகிய 4 பேரும் ஜாணை தடுத்து நிறுத்தி அவரது சட்டை பையில் இருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்து, மேலும் மாதம் ஐந்தாயிரம் மாமூல்  தர வேண்டுமென கூறி சென்றுள்ளனர். ஜான் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாரோன் பிரபு, ஆல்பர்ட் ஆகிய  2 பேரை கைது செய்தனர்.
Next Story