பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!
X
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, இசிஜி பரிசோதனை உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், இருதய மாரடைப்பு பிரச்சனைகள், ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள், பக்கவாத சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் (ஹீமோதெரபி), கல்லீரல், கணையம் சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு தண்டு வட அறுவை சிகிச்சைகள், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள், பித்தப்பை கல் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சைகள், தீ காயம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.  இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு சலுகை கட்டணம் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் தூத்துக்குடி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை பங்கெடுத்தது. மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் மேற்கு மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ருக்மணி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story