தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்

தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்
X
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை போக்குவரத்து மாற்றங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை போக்குவரத்து மாற்றங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும். மேற்படி திருவிழாவை முன்னிட்டு 23.09.2025 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு. சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் மாற்றுப்பாதைகள்: 22.09.2025 அன்று மாலை 6 மணி முதல் 23.09.2025 ஆகிய இரண்டு நாட்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர திருச்செந்தூரிலிருந்து குலசேகரபட்டிணம் வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும், பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Next Story