கரூரில் நூதனமாக மணல் திருட்டில் ஈடுபடும் திமுகவினர்.வன்னியர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

கரூரில் நூதனமாக மணல் திருட்டில் ஈடுபடும் திமுகவினர்.வன்னியர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
கரூரில் நூதனமாக மணல் திருட்டில் ஈடுபடும் திமுகவினர்.வன்னியர் மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார். வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் சக்தி படையாட்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்களுடன் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட காவிரி ஆற்று பகுதியில் இரவு பகல் பாராமல் திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் அரங்கநாதன் பேட்டை பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ராட்சத இயந்திரங்களை கொண்டு காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுகிறது. மேலும் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் செங்கல் சூளைக்கு நவுட்டு மண் எடுப்பதாக சொல்லி போலியான வெளியூர் அனுமதி சீட்டு மூலம் நூதன முறையில் திருட்டு மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக புகார் அளிக்க சென்றால் திமுகவினர் கொலைமிரட்டல் விடுவதாகவும், இது தொடர்பாக இன்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக சக்திபடையாட்சி தெரிவித்தார்.
Next Story