கரூர் -மருத்துவ வசதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் -மருத்துவ வசதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கரூர் -மருத்துவ வசதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். கரூர் மாநகரத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்து கொண்டே நோயாளிகளை தங்களுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற வைக்கும் மருத்துவர்களை கண்டித்தும், பருவமழை காரணமாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அதிகமாக வருகிற நோயாளிகளுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்க வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி, மாவட்ட பொருளாளர் சதீஷ், தொகுதி துணை செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர்கள் லோகநாதன், சுடர்வளவன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story