பரமத்தி வேலூரில் தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம்.

நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி வேலூரில் தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம்.
பரமத்திவேலூர்,செப்.22: நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என தீர்மான உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினரும், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவருமான டாக்டர் சோமசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக வேலூர் பேரூர் செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரமத்தி வேலூர் தொகுதி பொறுப்பாளர் உமாராணி கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில வக்கீல் அணி இணைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் 4 1/2 ஆண்டு காலத்தில் மக்களுக்கு செய்துள்ள எண் எண்ணற்ற சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். குறிப்பாக மகளிருக்கான திட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திட்டங்களையும், தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் தெரிவித்தார். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பேசினார். வருகிற தேர்தலில் தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கபிலர்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன், பொறுப்பாளர், சரவணகுமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்ரமணியம், பரமத்தி பேரூராட்சித் தலைவர் மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் செந்தில்குமார்,வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர்கள் நவடிராஜா. பூக்கடை சுந்தர்,பேரூர் செயலாளர்கள் பொத்தனூர் கருணாநிதி, பாண்டமங்கலம் பெருமாள் என்கிற முருகவேல், பரமத்தி ரமேஷ் பாபு, வெங்கரை சூர்யா ராமலிங்கம், வேலூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா, வேலூர் பேரூர் அவைத் தலைவர் மதியழகன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகளும் பொது மக்களும், தொண்டர்களும் பொது மக்களும் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் அணைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story