அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு

அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு
X
தேர்தலுக்காக புதிய நிர்வாகங்களை நாங்கள் கோரிக்கைகளாக வைக்கவில்லை ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லி தான் நான்கரை ஆண்டு காலம் போராடி வருகிறோம்- ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ராமமூர்த்தி திண்டுக்கல் வேலு மஹாலில் பேட்டி
திண்டுக்கல் வேலு மஹாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது ஓய்வூதியர்கள் மீதான பொழுது நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் புகார் குறித்து துறை நிபுணர்கள் விசாரணை அலுவலர்களில் துணை ரீதியான விசாரணைகளில் அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடித்திடல் வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு, உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அளித்து ஆணையிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50% ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளருக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக அனுமதித்திட ஆணையிட வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தலுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல. இந்த கோரிக்கை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்றுக்கொண்ட கோரிக்கை. தேர்தலுக்கு முன்பாக அவர்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்த காலத்தில் நாங்கள் சென்று சந்தித்த பொழுது அப்போதைய திமுகவின் டிராப்ட் கமிட்டி தலைவராக இருந்த இளங்கோவன் உங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று வாக்களித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லி தான் எங்களது சங்கம் நான் கரை ஆண்டு காலம் போராடி வருகிறது. தேர்தலுக்காக புதிய நிர்பந்தத்தையும் அரசுக்கு நாங்கள் வைக்கவில்லை. எங்களது துறையில் உள்ள பிரத்யோகமான கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகள் என்று அதிகாரிகளால் ஆறு ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்காலத்தில் நாங்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம் என பேசினார். மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story