மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட காவல் நிலையம் கட்டிடம் திறப்பு

X
செங்கல்பட்டு மாவட்டம்,மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட காவல் நிலையம் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள்,மண்ணிவாக்கம் காவல் நிலையம் ஆய்வாளர்,ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம், ஒன்றிய செயலாளர் எம். டி. லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன்,வண்டலூர் மாவட்ட பிரதிநிதி குணா, காவல்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

