புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியிலும் மனு கொடுத்த கிராம மக்கள்
கவுள் பாளையமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடை வருவதை தடை செய்ய வேண்டிஅப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பெரம்பலூர் அருகே உள்ள கவுள் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர் இதனைத்தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் போது தாங்கள் குடியிருக்கும் கவுல் பாளையம் கிராமத்தில் அருகே ஏற்கனவே ஒரு மதுபான கடை இயங்கி வரும் நிலையில் தற்போது மக்கள் வசிக்கும் அதே பகுதியில் புதிதாக மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன, அங்கு பள்ளி, மாணவ மாணவிகள் செல்லும் பாதை இருப்பதாலும் மேலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதுகாப்பும் இன்றி இருப்பதாலும், மதுபான கடை திறந்தால், மது அருந்திவிட்டு செல்லும்போது அதிகமான விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, இதனால் சிறுவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, எனவே அப்பகுதியில் உள்ள மக்களின் நலம் கருதி மதுபான கடை வருவதை தடை செய்ய வேண்டும், அதனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்து இருப்பதாக தெரிவித்தனர், மேலும் மதுபான கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலை மறியல் உள்ளிட்டபோராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
Next Story