பர்கூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

பர்கூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
X
பர்கூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சீமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பர்கூர் தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் நிலைய அலுவலர் பழனி தலைமையில் மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினர். அப்போது பள்ளி விடுமுறை தினங்களில் மாணவர்கள் நீர் நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோரின் மேற்பார்வையில் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story