சிப்காட் நிலம் கையகப்படுத்திய விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

X
தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம், ஏ.குமரெட்டியாபுரம், குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1996ஆம் ஆண்டு சுமார் 1,600 ஏக்கர் நிலம் சிப்காட் நிர்வாகம் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தியது. இந்த நிலங்களுக்கு உரிமையுடைய விவசாயிகளுக்கு ஒரே சீரான இழப்பீடு வழங்கப்படாமல், 80 ஆயிரம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வேறுபாடு உள்ள வகையில் இழப்பீடு வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதனை கண்டித்து, தமிழ்நாடு மக்கள் நல இயக்க தலைவர் காந்தி மள்ளர் தலைமையில் இன்று தூத்துக்குடியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
Next Story

