தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் கிருஷ்ணசாமி

X
புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி கடந்த இரு நாள்களாக தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். அதன் தொடா்ச்சியாக நேற்று சங்கரன்கோவில் வந்த அவா் பயணிகள் விடுதியில், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் வசிக்கும் கிராமங்களில் அண்மையில் நேரில் சென்று நான் பாா்வையிட்டதில் அந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி வசிக்கின்றனா். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அகன்று கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணி ஆட்சியில் புதிய தமிழகம் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி வெற்று விளம்பர மாடல் ஆட்சி தான். 2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றாா் அவா். பேட்டியின்போது மாநில துணை அமைப்பாளா் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்டச் செயலா் ராசையா, வடக்கு மாவட்ட இணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.
Next Story

