ஓசூர் மாநகராட்சி உரக்கிடங்கில்குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுவதற்கு தூய்மை பாரத திட்டம் 2024-25-ன் கீழ் தாசேப்பள்ளி உரக்கிடங்கில் உள்ள 41,400 மெட்ரிக்டன் குப்பைகளை 3.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மேயர் சத்யா, மாநகராட்சி ஆணையாளர் ஷபீர் ஆலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

