தென்காசியில் மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்

X
தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கூலி தொழிலாளி, தென்காசி யானைப்பாலம் அருகே உள்ள கோயில் மடத்தில் படுத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய் பொடி துாவி பின்னர் மது பாட்டிலை உடைத்து அவரது கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்தி தாக்கினர் . பலத்த காயமடைந்த ரமேஷை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

