கொடைக்கானலில் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

X
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் ஏற்கெனவே பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள மலைச் சாலைகளும், ஏரிச் சாலை முதல் அப்சா்வேட்டரி வரை உள்ள மலைச் சாலைகளும் சேதமடைந்து காணப்பட்டன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் கூடுதலாக சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மலைச் சாலைகளைஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Next Story

