வாராப்பூர்: தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை

X
வாராப்பூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இவை நேரங்களில் முதியோர்களை தெரு நாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

