புதுக்கோட்டை: கைவரிசை காட்டிய திருடர்கள்! மடக்கிய போலீஸ்
ஆலங்குடி அடுத்த கொத்தகோட்டையைச் சேர்ந்த பிரபு என்பவர் சம்பவத்தன்று ஆலங்குடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.40 லட்சம் பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டியில் உள்ள டிக்கியில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story





