கோவை மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு !

X
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே வேலைக்கு சென்ற மைதீன் பாத்திமா என்பவரின் மோட்டார் சைக்கிளில் குட்டி பாம்பு ஒன்று நேற்று திடீரென வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பயத்தில் வாகனத்திலிருந்து குதித்தார். பின்னர் பாம்பு முன்புறத்தில் ஒளிந்து கொண்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனத்தைப் பிரித்து பாம்பை பிடித்து காட்டுப் பகுதியில் விட நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 1 அடி நீளமுள்ள நல்ல பாம்பு குட்டி என்பதும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

