கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு !

X
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாலை நீதிமன்ற இமெயிலுக்கு வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கொண்டு பல மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். நீதிமன்ற கட்டிடங்கள், வாகன நிறுத்தம், நுழைவாயில், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் சோதிக்கப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மிரட்டல் இமெயிலை அனுப்பியவர் யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

