கோவை சாய்பாபா காலனி அண்ணா மார்க்கெட்டின் அவல நிலை – வேதனையில் வியாபாரிகள் !

X
கோவை சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே உள்ள அண்ணா மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த கனமழையால் சாக்கடை கழிவு நீர் மார்க்கெட்டை சூழ, காய்கறிகள் பாதிக்கப்பட்டது. தற்போது, கடந்த ஐந்து நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளும், காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் சரவணகுமாருக்கும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், அண்ணா மார்க்கெட்டின் அவல நிலையை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் அது வைரலாகி வருகிறது.
Next Story

