கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலயத்தில் தேர்த்திருவிழா !

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலயத்தில் தேர்த்திருவிழா !
X
செண்டை மேள இசையுடன் உற்சாகமாக நடைபெற்ற தேர்த்திருவிழா.
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று மாலை தேர்த்திருவிழா நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நவநாள் பிரார்த்தனைகள் நடைபெற்றன. நேற்றைய திருப்பலியைத் தொடர்ந்து பேராயர்கள் ரோலிங்டன், ஜோ டேனியல், அந்தோணி ராஜ் ஆகியோர் தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், புலியகுளம் பகுதியைச் சுற்றி வந்த தேர் ஆலயத்தில் நிறைவடைந்தது. செண்டை மேளத்தின் இசையுடன் உற்சாகமாக விழா நடைபெற்றது.
Next Story