கோவையில் இனிப்பு, சிப்ஸ் விலை குறைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு !

X
கோவையில் இனிப்பு மற்றும் சிப்ஸ் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக பொருட்கள் வாங்கி வருகின்றனர். முன்னதாக மைசூர் பாக் கிலோவுக்கு ரூ.420 இருந்தது, தற்போது ரூ.380-ஆகவும், சிப்ஸ் ரூ.640-இல் இருந்து ரூ.580-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னர் இரண்டு பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் இப்போது மூன்று பொருட்கள் வரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு காரணமாக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கோவையில் கடைகளுக்கு நேரில் சென்று, மக்கள் மற்றும் வியாபாரிகளின் கருத்துக்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டறிந்தார்.
Next Story

