திருச்செந்தூர் கோவில் குறித்து புகார் தெரிவித்த பாஜக பிரமுகர் கைது: பா.ஜ.கவினர் ஆறுதல்!

X
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு, கோவில் சண்முகவிலாசம் மண்டபம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி திருச்செந்துார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருச்செந்துாரை சேர்ந்த இந்து முன்னணி நகர துணை தலைவர் செந்தில்குமார், மணிகண்டன், பிரித்திவிராஜ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்திய பாஜக பிரமுகர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில விவசாய அணி செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
Next Story

