நாசரேத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: ஆட்சியரிடம் மனு

நாசரேத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: ஆட்சியரிடம் மனு
X
நாசரேத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை!
நாசரேத் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்று காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், "ஏரல் தாலுகா, நாசரேத் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதி, இங்கு இது வைர அரசு மருத்துவமனையே இல்லாமல் மக்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். மக்கள் அவசர சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் தொடர் மரணங்கள் நிகழகின்றன. இதனை அரசு கவனத்தில் எடுத்து அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகள் பிரிவுடன் கூடிய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.  2 நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 28 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிடானேரி சிப்காட் வளாகத்தில் ஒரு சில சிறிய தொழிற்கூடங்கள் மட்டுமே செயல்படுகிறது. அந்த வளாகத்தில் புதிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 தமிழக அரசின் அரசு விரைவு பேருந்து கழகத்தின் மூலமாக இயங்கி வந்த அரசு விரைவு பேருந்து கடந்த ரெண்டு வருடங்களாக இயக்கப்படவில்லை, எனவே ஏற்கனவே இயங்கி வந்த வழித்தடங்களான குட்டம், இடையன்குடி. திசையன்விள, சாத்தான்குளம், நாசரேத் திருநெல்வேலி வழியாக சென்னை, ஈரோடு, கோயமுத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்ற அரசு பேருந்து மற்றும் உடன்குடி, மெஞ்ஞானபுரம், நாசரேத் திருநெல்வேலி வழியாக பெங்களூர், சென்னை, கோறைஆகிய வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பஸ்கள் மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story