தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

10 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும்
பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது ..... மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும், அரசாணை 950, நாள் 8.8.1990 இன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இதனை வலியுறுத்தி இன்று மாநிலம் அளவில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளையின் சார்பில் திருச்சி மண்டல பொறுப்பாளர் அகஸ்டின் தலைமையில் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து அங்கிருந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட, 30 க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Next Story