முழுநேர அரசு ஊழியராக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்கி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சந்திரா தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ரா பேச்சிமுத்து, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.ஜெப ராணி மாவட்ட பொருளாளர் எஸ். ஹேமா, சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் எம்.தேவேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட துணை நிர்வாகிகள் மகாலட்சுமி, பாப்பா, சித்திராலேகா, லதா, சாந்தி, செல்வ வடிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

