தலைமை அஞ்சலகம் நகரின் மையத்தில் அமைக்க முன்னாள் அமைச்சர் வசம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |23 Sept 2025 4:19 PM ISTகுமாரபாளையத்தில் தலைமை அஞ்சலகம் நகரின் மையத்தில் அமைக்க முன்னாள் அமைச்சர் வசம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குமாரபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகே , போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் செயல்பட்டு வந்தது. அது வாடகை கட்டிடம் என்பதால், கட்டிட உரிமையாளர், இடம் வேண்டும் என்று கேட்டதால், தற்காலிகமாக பள்ளிபாளையம் சாலை, காந்தி நகரில் செயல்படும் என்று அறிவித்தனர். அதன்படி பல ஆண்டுகளாக அங்குதான் செயல்பட்டு வருகிறது. இது மிகவும் தொலைவு என்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் காலியாக உள்ளது. இங்கு தலைமை அஞ்சல் நிலையம் அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். இதனால், நேற்று வடிகால் பணிக்காக ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி வசம், பழைய சார்பதிவாளர் அலுவலகத்தை, தலைமை அஞ்சல் நிலையமாக மாற்றக்கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி அதிகாரிகள் வசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறிச் சென்றார்.
Next Story
