அஞ்செட்டி: டூவீலர் மீது லாரி மோதி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (42) கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் உன்சனஅள்ளி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒதிபுரம் பாலம் அருகே வந்த லாரி எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

