திருச்செங்கோடு அம்மன்குளக்கரை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தன்னார்வலதனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
Tiruchengode King 24x7 |23 Sept 2025 7:15 PM ISTதிருச்செங்கோடு பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மன் குளக் கரையை சீரமைத்து பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு பணிக்கான பூமி பூஜையை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன், நித்ரா ஆப் உரிமையாளர் கோகுல கண்ணன், துவக்கி வைத்தனர்.
திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் போதுமான பொழுதுபோக்கு வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், அம்மன் குளக்கரையை சீரமைத்து நடைமேடை அமைத்து, அமரும் இருக்கைகள் போட்டு, மின்விளக்கு அலங்காரம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விட பாதுகாப்பு வேலிகள் அமைத்து செயல்பாட்டிற்கு விட்டிருந்த நிலையில், அங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் குளக்கரையை பராமரிக்கவும், கரையில் உள்ள நடை பாதைகளை சீரமைத்து பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் மாலை நேரங்களில் பொழுதுபோக்காக அமர்ந்து கொள்ளவும் வசதியாக மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளையும் மெயின்டனன்ஸ்செய்துகொள்ளவும் நித்ரா ஆப் என்கிற தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இந்த பணியை இலவசமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்ட மித்ரா ஆப்ஸ் நிறுவனம் இன்று பணிகளை பூமி பூஜை செய்து துவக்கியது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திருச்செங்கோடு ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் சரவணன், திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், செல்லம்மாள் தேவராஜன், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கந்தசாமி, பேருந்து நிலைய கடை உரிமை யாளர்கள் சங்க தலைவர் சிவா சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story


