ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டு பகுதியில் சாக்கடை தேக்கத்தை சீரமைக்க நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டு பகுதியில் சாக்கடை தேக்கத்தை சீரமைக்க நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
X
ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டு பகுதியில் சாக்கடை தேக்கத்தை சீரமைக்க வலியுறுத்தி நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஜெயங்கொண்டம் செப்.23- அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துக்குமார் மற்றும் பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர் முகம்மது சுல்தான் வரவேற்றார். 2024-2025 -ம் ஆண்டின் ஆண்டறிக்கையை சங்கத்தின் பொதுச் செயலாளர் முத்துக்குமார் வாசித்தார். 2024-2025-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையை சங்க பொருளாளர் தியாகராஜன் பொதுக் குழுவில் வாசித்தார். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை தணிக்கை செய்து தணிக்கை சான்று வழங்குவதற்கு சங்க உறுப்பினர்கள் சந்திர சேகரர் மற்றும் மாரிமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சங்கத்தின் கணக்கினை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திடவும், மாநில சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு சந்தா தொகை செலுத்துவது எனவும், சங்கத்திற்கு தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் புதியதாக பொதுக்குழுவால் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்கள் செல்வராசு.செந்தில் குமார், சண்முகம், மாரிமுத்து, பாரிவள்ளல், பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து சங்கம் முன்னெடுத்து செய்யப்பட வேண்டிய பணிகளை குறிப்பிட்டு பேசினர். கூட்டத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் விருத்தாசலம் மார்க்கமாக புதிய இரயில்வே பாதை அமைத்துக்கொடுக்க தென் இந்திய இரயில்வே பொது மேலாளர் கேட்டுக் கொள்வது.தற்போது மழைக்காலம் தொடங்கவிட்ட படியால் நகராட்சி முழுவதுமாக கொசு மருந்து கலந்த புகை மருந்து அடிக்க வேண்டும், ஜெயங்கொண்டம் மதனத்தூர் சாலையில் மாநில நெடுஞ்சாலை துறை, நகராட்சி துறையினர் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற செய்து கொடுக்க வேண்டும். நகராட்சியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளை உரிய நேரத்தில் ஆன் ஆப் செய்ய வேண்டும், குடிநீர் மோட்டார் இயக்கும் ஆப்ரோட்டர்கள் கவனமாக இருந்து சரியான நேரத்தில் மோட்டரை ஆன் செய்து கேட் வால்வுகளை சரியாக இயக்கி குடிநீர் சீராக விநியோகம் செய்திட வேண்டும், ஜெயங்கொண்டம் கடைவீதியில் நான்கு ரோடு சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொது மக்கள் நலன் கருதி கட்டண கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் நகராட்சி மூலம் ஆடு வதை சாலை அமைத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆடுகளை அறுத்து எடுத்து சென்று வியாபாரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாரியம்மன் கோவில் சந்தில் பூக்கடைகள் அமைந்துள்ளதை வார சந்தையில் தென்புறம் உள்ள கம்பெளவுண்டு சுவரை ஒட்டி கடைகள் கட்டி அமைக்க வேண்டும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள பிரியாணி கடைகளில் சமையல்கூடத்தை கடையின் பின்புறம் மாற்றி விற்பனை செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை கேட்டுக் கொள்வது. ஜெயங்கொண்டம் வட்ட அளவில் உள்ள ஏரி குளங்களில் உள்ள மண்ணை விவசாய பணிகளுக்கும், கட்டிட பணிகளுக்கும் வட்டாட்சியரின் முன் அனுமதி இன்றி அவரவர் தேவைக்கு வெட்டி எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும் , ஜெயங்கொண்டம் நகராட்சியில் மழைநீர் வடிகால்களை அகலமாக்கியும் வடிகாலில் உள்ள தூர்ந்து போன மண் மோடுகளை அகற்றி மழைநீர் இலகுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சி மலங்கண்குடியிருப்பு செல்லும் முகப்பில் உள்ள ஏரியின் வரத்து கால்வாயில் குளத்தின் ஆக்கிரமிப்பினை அகற்றியும் கொடுக்க வேண்டும், சிதம்பரம் சாலையில் சமுதாய கூடத்தின் இடத்தினை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேறப்பட்டது.
Next Story