சின்னவளையம் அரங்கன் ஏரியில் பனை விதைகளை நட்டு வைத்த சாரண சாரணிய மாணவர்கள்

சின்னவளையம் அரங்கன் ஏரியில் பனை விதைகளை நட்டு வைத்த சாரண சாரணிய மாணவர்கள்
X
சின்னவளையம் அரங்கன் ஏரியில் சாரண சாரணியர் மாணவர்கள் பனை விதைகளை நட்டு வைத்தனர்
ஜெயங்கொண்டம் செப்.24- தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் அறிவுறுத்தலின்படி உடையார்பாளையம் சாரண மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சாரண சாரணியர்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் இயற்கை வளத்தை காக்கவும் சின்னவளையம் அரங்கன் ஏரியில் பனை விதைகளை நட்டனர். இந் நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உடையார்பாளையம் சாரண மாவட்ட ஆணையருமான கொளஞ்சியப்பா துவக்கி வைத்து,சுற்றுச்சூழலை மேம்படுத்துவது , இயற்கை வளங்களைக் காப்பதன் அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் உடையார்பாளையம் சாரண மாவட்ட செயலாளருமான பாண்டியன் மற்றும் பள்ளி சாரணசாரணிய மாணவர்கள் சின்ன வளையம் அரங்கன் ஏரியின் ஓரத்தில் பனை விதைகளை நட்டனர். மற்றவர்களிடமும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சாரணிய ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story