ஞானமணி கல்லூரி இன்குபேஷன் மையம் சார்பில் புதிய செயலி அறிமுகம்..

ஞானமணி கல்லூரி இன்குபேஷன் மையம் சார்பில் புதிய செயலி அறிமுகம்..
X
ஞானமணி கல்லூரி இன்குபேஷன் மையம் சார்பில் புதிய செயலி அறிமுகம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஞானமணி பொறியியல் கல்லூரியின் இன்குபேஷன் மையம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்செவி மூலம் விரும்பியவாறு புகைப்படங்களை உருவாக்கும் வகையிலும், வர்த்தக உலகில் பயன்படுத்தும் வகையிலும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஞானமணி கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய உதவி ஒருங்கிணைப்பாளர் எஸ்‌.கௌதம் உருவாக்கிய இச்செயலி அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கான விழாவில் ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மதிவந்தினி அரங்கண்ணல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பி.சஞ்சய் காந்தி வரவேற்றுப் பேசினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் மூலம் பொதுமக்கள், இளைஞர்கள், சிறு, நடுத்தர வர்த்தகர்கள் எளிய முறையில் இதனை பயன்படுத்தும் வகையில் இச்செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. புளூபிக்ஸ் என பெயரிடப்பட்ட இச்செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கும் மேம்படுத்தப்பட்ட படங்களின் மூலம் இளைஞர்களிடமும், வர்த்தகர்களிடமும் புதிய தாக்கத்தை ஏற்டுத்தும் என ஞானமணி கல்வி நிறுவனத் தலைவர் தி.அரங்கண்ணல் பேசினார். புளூபிக்ஸ் என்ற இந்த புதிய செயலி மூலம் விரும்பும் வகையிலான மேம்படுத்தப்பட்ட படங்களை எளிதில் உருவாக்க முடியும். அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதால், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் தங்களது பொருளை, அதிக செலவில்லாமல் எளிய முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லமுடியும். இது சிறு வணிகர்களின் சவால்களை தீர்க்கும் என இதனை உருவாக்கியுள்ள ஞானமணி கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய உதவி ஒருங்கிணைப்பாளர் எஸ்‌.கௌதம் குறிப்பிட்டார். ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட இச்செயலி உருாக்கிய ஞானமணி கல்லூரி இன்குபேஷன் மைய பொறுப்பாளர்கள், செயலி உருவாக்கிய கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய உதவி ஒருங்கிணைப்பாளர் எஸ்‌.கௌதம் ஆகியோரை கல்லூரித் தலைவர் தி.அரங்கண்ணல் விழாவில் பாராட்டினார். ஞானமணி கல்லூரியின் துணைத் தலைவர் மதுவந்தினி அரங்கண்ணல் விழாவில் பேசியபோது "இந்தியாவின் சிறு வணிக சமூகத்திற்கான தொழில்நுட்பத்தை புதிய யுக்திகளுடன் உருவாக்கும் தொழில் முனைவோரை இந்த புதிய புளுபிக்ஸ் செயலி மூலம் ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார். சிறு வணிக நிறுவனங்கள் bluesquaregroup.in/bluepix என்ற link மூலம் இச்செயலியின் சேவையை வாட்ஸ் ஆப்-இல் தங்கள் நிறுவன புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து பயன்படுத்தலாம் என கல்லூரி இன்குபேஷன் மையம் தெரிவித்துள்ளது. விழாவின் முடிவில் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய உதவி ஒருங்கிணைப்பாளர் எஸ். கெளதம் நன்றி கூறினார்.
Next Story