இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை ஆக்கரமிப்பாளரிடமிருந்து மீட்க பொதுமக்கள் கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |23 Sept 2025 8:40 PM ISTகுமாரபாளையம் அருகே அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை ஆக்கரமிப்பாளரிடமிருந்து மீட்க பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக பயனாளிகள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் அவர்களிடம் புகார் அளித்திருந்த நிலையில் இன்று குமராபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் அவர்களுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் பயணாளிகளுக்கு தகுந்த இடம் வழங்கபடும் என உறுதியளித்தார்..... மேலும் இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகள் உடன் இருந்தனர்...
Next Story
