நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளை முன்னிட்டு மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது

X
தேனி பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று ஆலய வளாகத்தில் உற்சவர் அம்மனுக்கு மஞ்சள் நிற வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மாலைகளால் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு காட்சி தந்தார்.தொடர்ந்து அம்மனுக்கு தூபம் காட்டப்பட்டது அதனை தொடர்ந்து ஷோடச உபச்சாரம் நடத்தி மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளில் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்.
Next Story

