கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.
X
நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எம்.ஜி நகரில் குடியிருந்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம், இவர் வாங்கிலி பீட்ஸ் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் முட்டை கோழிப்பண்ணைகளை நிறுவி தொழில் செய்து வரும் நிலையில் தமிழ்நாடு முட்டை கோழி மார்கெட்டிங் அசோசியேஷன் தலைவராகவும் இருந்து வருகின்றார். இந்த நிலையில் இன்று இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் எம்.ஜி நகரில் உள்ள வாங்கிலி சுப்பிரமணியம் வீடு அதன் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா பைனான்ஸ் மற்றும் அருணை சிட்ஸ் மற்றும் திருச்சி சாலையில் உள்ள வாங்கிலி பீட்ஸ் உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நாமக்கல்லில் கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
Next Story