விருப்பாச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

விருப்பாச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
X
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாச்சியில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்றைய தினம் விருப்பாச்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 7 தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள், விருப்பாச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 2 பயிற்சியாளர்களுக்கு மிதிவண்டிகள், 2 பயிற்சியாளர்களுக்கு சீருடைகள், 2 பயிற்சியாளர்களுக்கு வரைப்படக்கருவிகள், 2 பயிற்சியாளர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர், கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சைகாந்தி, ஊரக வளர்ச்சி முகாமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபுபாண்டியன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story