கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்

X
குமரி மாவட்டம் அனந்தமங்கலம், பணம்தின்னி மாவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி மகன் ராஜாமணி. இவர் மீது புதுக்கடை போலீஸ் நிலையத்தில் அடிதடி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ராஜமணி நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளார். இதை தொடர்ந்து குழித்துறை கோர்ட் ராஜமணியை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும் அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்த புதுக்கடை போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த தகவலை புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
Next Story

