வீட்டில் புகுந்த மிளா வனத்துறையினர் பிடித்தனர்

X
குமரி மாவட்டம் கடையால் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் என்பவரது வீட்டு சமையலறை அருகே விறகுகளை போட ஒரு அறை உள்ளது. நேற்று காலை மிளா ஒன்று அந்த அறையில் புகுந்தது. உடனடியாக இப்ராஹிம் களியல் வனச்சரக அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். வனச்சரக அலுவலர் முகைதின் தலைமையில் வன ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பார்த்த போது, சுமார் 3 வயதான பெண் மீளா ஒன்று மிரட்சியுடன் நின்றது கண்டனர். காட்டில் இருந்து செந்நாய்கள் துரத்தியதால் மிளாவின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மிளாவை வலை மூலம் பிடித்து, பின்னர் அடர்ந்த வனப்பகுதியான குந்திரிகம்காடு என்ற பகுதியில் மிளவை கொண்டு விட்டனர்.
Next Story

