கிரிக்கெட் மட்டையால் தாக்கி வாலிபர் பற்கள் உடைப்பு

X
குமரி மாவட்டம் வாணியகுடியை சேர்ந்தவர் ரஞ்சித் மகன் டைசன் (24). நேற்று குளச்சல் லியோன் நகர் சகாய மாதா சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கொட்டில் பாடு பகுதியை சேர்ந்த பினிஷ் (20 ) என்பவரை உதய மார்த்தாண்டத்தை சேர்ந்த லாரன்ஸ் என்ற பாலா மற்றும் அவரது சகோதரர் ஜெகன், நண்பர் இயேசு பாலன், அஸ்வின், மேல் மிடாலத்தை சேர்ந்த விக்டர், பிரபு ஆகிய 6 பேர் சேர்ந்து தாக்குவதற்காக துரத்தினர். இதை டைசன் தடுத்து அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கிரிக்கெட் மட்டைகயால் டைசனை தாக்கினர். இதில் டைசனின் மூன்று பற்கள் உடைந்தது. அவர் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் டைசனை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story

