அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியவர்களுக்கு அபராதம்

அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியவர்களுக்கு அபராதம்
X
கொடைக்கானலில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியவர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாவட்ட வனப்பகுதிக்கு கட்டுப்பட்ட பெரும்பள்ளம் வனச்சரகம் பண்ணைக்காடு அருங்காணல் காப்புக்காடு பகுதிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் சராகம் பகுதியில் வனத்துறை அனுமதி இல்லாமல் தனியார் படப்பிடிப்பு நிறுவனத்தினர் இப்பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்தியவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக விசாரணை தெரிய வந்ததை எடுத்து மாவட்ட வன அலுவலர் கொடைக்கானல் அவர்களின் உத்தரவுப்படி உதவி வனப் பாதுகாவலர் அவர்களின் அறிவுறுத்தபடி பெரும்பள்ளம் வனச்சரக அதிகாரி படப்பிடிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு தலா 25,000 வீதம் 75 ஆயிரம் அபராதம் விதித்து அபராதத்தை வசூலித்தனர்.
Next Story