பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தருமபுரி ஒன்றியம், ஆண்டிஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தருமபுரி ஒன்றியம், ஆண்டிஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த 30 பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் வழங்கினார்கள். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர்கள் ராஜராஜன் சௌகத்அலி பலர் பங்கேற்றனர்.
Next Story