பெண் அடித்துக் கொலை கணவரின் தம்பி கைது

X
குமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி வசந்தா ( 53). கிருஷ்ணசாமியின் தம்பி பிரகலாதன் (50). இவர்களுக்கு பாதை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரகலாதன் தனது வீட்டில் இருந்த மண்வெட்டியின் கைப்பிடி எடுத்து வசந்தாவின் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். வசந்தாவை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகலாதனை கைது செய்தனர்.
Next Story

