தர்மபுரியில் பட்டுக் கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 14.65 லட்சத்திற்கு பட்டுக் கூடுகள் விற்பனை
தர்மபுரி 4 ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் அரசு பட்டுக்கூடு ஏலஅங்காடி செயல்பட்டு வருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2230 கிலோ பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர் மேலும் நேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுகூடுகள் ரூ.780, குறைந்தபட்சமாக ரூ.450, சராசரியாக சிக்ஸ் ரூ.668 என விற்பனையானது ஒட்டுமொத்தமாக நேற்று 14,99,886 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story