அறந்தாங்கி அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
X
நிகழ்வுகள்
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நல பணித்திட்டமும், ஆவுடையார் கோவில் வட்ட சட்ட பணிகள் குழுவும் இணைந்து குடும்ப நல சட்ட விழிப்புணர்வு முகாம் கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் (செப்டம்பர் 23 ) நடைபெற்றது. முகாமில் சட்டம் குறித்து குழுவின் சார்பில் வழக்கறிஞர் திரு. எஸ் .லோகநாதன் மற்றும் பழனியப்பன் ஆகியவர்கள் சட்ட கருத்துகளை வழங்கினார்கள். இதில் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story