வெளியூர் மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி

மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராமத்தில், ஏராளமான வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பைபர் படகுகளில் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, ஆறுக்காட்டுத் துறையில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
Next Story