தேனி வைகை அணையில் நிறுத்தப்பட்ட நீர் மீண்டும் திறப்பு

தேனி வைகை அணையில் நிறுத்தப்பட்ட நீர் மீண்டும் திறப்பு
X
அணையில் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு ஒரு போக பாசன நிலங்களுக்கு செப்.18 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி அருகே கால்வாயில் மூழ்கிய சிறுவனை மீட்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட நீர் 17.30 மணி நேரத்திற்கு பின் இன்று (செப்.24) மீண்டும் திறக்கப்பட்டது.
Next Story